ஆஸி ஓபன்: தனிவிமானத்தில் வந்த 3 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 47 வீரர்கள்!

16 January 2021, 9:42 pm
Aus Open - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் நிர்வாகிகளை ஏற்றி வந்த தனி விமானத்திலிருந்த மூன்று பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ள 1200 வீரர்களை அழைத்து வர ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு 15 தனி விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விமானங்கள் மூலம் வீரர்கள் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து மெப்போர்னுக்கு வந்தடைந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த தனி விமானத்திலிருந்தவர்களுக்கும் மற்றும் துபாயிலிருந்து வந்த தனி விமானத்தில் இருந்தவர்களில் மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஹோட்டலில் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து வந்த விமானத்திலிருந்த 24 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல அபுதாபியிலிருந்து வந்த விமானத்தில் இருந்த 23 வீரர்களும் ஓட்டலிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் வந்த 47 வீரர்களும் 14 நாட்களுக்கு ஓட்டல் அறையை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. ஆனால் அவர்களுக்குக் கடுமையான விதிமுறைகளுடன் ஈடுபட ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விக்டோரியா மாநில சுகாதாரத்துறை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், “விமான உறுப்பினர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கும் மற்றொருவர் ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்ல ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 66 பயணிகளில் தொற்று உள்ள நபருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவிற்கு தொற்று உறுதியானது. அதேபோல அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த வருடம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொரோன வைரஸ் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

Views: - 14

0

0