இந்தியா ஆஸ்திரேலியா இடையே தூதுவராக ஆஸி.,முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம் !!

2 September 2020, 10:09 am
Hayden - Updatenews360
Quick Share

இந்திய ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் தூதர்களில் ஒருவராக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்த தூதுவராக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த லிசா சிங் ஆகியோரை ஆஸ்திரேலிய அரசு நியமனம் செய்துள்ளது.

2005ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மேத்யூ ஹெய்டன், ஆஸ்திரேலிய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள், 161 ஒரு நாள் போட்டிகளை விளையாடி 40 சதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்திய ஆஸ்திரேலியா கவுன்சிலின் தலைவராக அசோக் ஜேக்கப் என்பவரும், துணைத்தலைவராக லிசா சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் மற்றும் டெட் பெயிலியு இணைந்த பணியாற்றுவார்கள் என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை இந்தியாவுடன் இணைந்து முன்னேற்றுவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0