டி20 உலகக் கோப்பை:7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி..!

Author: kavin kumar
28 October 2021, 11:33 pm
Quick Share

ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில்,இன்றைய 22-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் பெரேரா 25 பந்துகளில் 35 ரன்களும், சரித் அசலங்கா 27 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ், மிட்சில் ஸ்டார்க், ஆடம் சாம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. துவக்க வீரர் டேவிட் வார்னர் 65 ரன்களும், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 ரன்களும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதன்பின்னர் ஸ்டீவன் ஸ்மித் (28 ரன்கள்), ஸ்டாய்னிஸ் 16 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா வெற்றியை எட்டியது.3 ஓவர்களில் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: - 600

0

0