டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி நிறைவு…! இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்ற அவனி லெகாரா

Author: Udhayakumar Raman
5 September 2021, 9:05 pm
Quick Share

டோக்கியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பி போட்டியின் நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர். நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார். பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா 24-வது இடம் பிடித்தது. மேலும் நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடன கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. பின், பாராலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, வரும் 2024ல் நடக்கவுள்ள பாரிஸ் நகர நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீகோ ஹஷிமோடோ, போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். சிறப்புரையாற்றிய சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐ.பி.சி.,) தலைவர் ஆன்ட்ரூ பார்சன்ஸ், ஜப்பான் நகர மக்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு பெற்றதாக முறைப்படி அறிவித்தார். அடுத்த பாராலிம்பிக் பாரிசில் நடக்கும் என்று தெரிவித்தார். அதன்பின் பாராலிம்பிக் ஜோதி அணைக்கப்பட்டது. முடிவில் கண்கவர் வாணவேடிக்கையுடன் நிறைவு விழா நிகழ்ச்சி முடிந்தது.

Views: - 747

0

0