ஐ.பி.எல்.லில் கால்பதிக்கும் பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி நிறுவனம்’..!
10 August 2020, 4:37 pmகொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, லடாக் பிரச்சனையால் ஐ.பி.எல். தொடரின் ஸ்பான்ஷர்சிப் உரிமத்தை பெற்றிருந்த சீனாவின் விவோ நிறுவனம், அதில் இருந்து விலகியது.
இதையடுத்து, அமேசான், பைஜுஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான டைட்டிள் ஸ்பான்ஷருக்கு விண்ணப்பிகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் ஸ்பான்ஷருக்கான ரேஸில் களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே. திஜராவாலா கூறுகையில், “எங்களின் நிறுவனத்தை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். விரைவில் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்ஷருக்கு விண்ணப்பிப்போம்,” எனத் தெரிவித்தார்.