கடைசி ஓவர் வரை சென்று த்ரில் வெற்றி : அதிரடி ஆட்டத்தை ஆடிய தினேஷ் கார்த்திக்… முதல் வெற்றியை ருசிப்பார்த்த RCB!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 11:26 pm
RCB WON - Updatenews360
Quick Share

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி போராடி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாஅணியில் தொடக்க வீரராக ரஹானே, வெங்கடேஷ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் 4-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரஹானே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால், நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கடைசியில் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியாக விளையாடி 25 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கும்.

இறுதியாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3, ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டை பறித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு முன்னணி வீரர்களுக்கு உமேஷ் யாதவ் அதிர்ச்சி கொடுத்தார். விராட் கோலி மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் விக்கெட்டை எடுக்க, மறுபக்கம் சவுத்தியின் பந்தில் டூ பிளசிஸ் அவுட் ஆனார்.

3 விக்கெட் இழந்து 17 ரன் எடுத்திருந்த போது டேவிட் வில்லி, சுனில் நரேன் பந்தில் அவுட் ஆக, ரூதர் போர்டு மற்றும் ஷாபாஸ் நிதானமாக ஆடினர். பின்னர் வருண் சக்கரவர்த்தி பந்தில் 6 அடித்ம ஷாபாஸ் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.

இதையடுத்து ஹசரங்கா, ரூதர்போர்டு அவுட்டாக 18 ஓவரில் 111 ரன் எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ஹர்ஷல் படேல் நேர்த்தியாக ஆடினர். இறுதி ஓவரில் 7 ரன் தேவை என்ற நிலையில் ரஸ்ஸல் வீசிய முதல் பந்தையே 6க்கு விளாசிய தினேஷ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டியதால் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

Views: - 1117

0

0