6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி…! ப்ளே ஆஃப்பை உறுதி செய்த பெங்களூரு…!!!

Author: kavin kumar
3 October 2021, 9:22 pm
Quick Share

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய 48-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக படிக்கல் 40 ரன்கள் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 57 ரன்கள் எடுத்தனர்.165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் மயங்க் அகர்வாலும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடத் தொடங்கிய மார்க்ரம்மும் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்திலேயே ஷாருக்கான் ரன்அவுட்டானது பஞ்சாப்புக்கு பின்னடைவானது.அதனையடுத்து, போட்டி முழுவதுமாக பெங்களூரு கைக்கு சென்றது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி மூன்றாவது அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Views: - 425

0

0