இலக்கு தெரியாமல் களமிறங்கிய வங்கதேசம்: கணக்கிட போட்டி நிறுத்தம்!

Author: Udhayakumar Raman
30 March 2021, 10:29 pm
Quick Share

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலக்குத் தெரியாமல் வங்கதேச அணி களமிறங்கியதால் போட்டி நிறுத்தப்பட்டு கணக்கிடப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலக்கு தெரியாத காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்ட சம்பவம் முதல் முறையாக அரங்கேறியுள்ளது. வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நேபியரில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் அடித்தது.

இதையடுத்து மழை குறுக்கிட காரணத்தினால் வங்கதேச அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்த இலக்கு தெரியாமல் வங்கதேச அணி களமிறங்கியது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. போட்டியின் 1.3 ஓவர்கள் வரை வங்கதேச அணியினருக்கு மாற்றியமைக்கப்பட்ட இலக்கு தெரியாமலே விளையாடினர். பின் களத்தில் இருந்த அம்பயர் போட்டியை நிறுத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வங்கதேச அணிக்கு 16 ஓவரில் 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதோடு இந்த வேடிக்கை விளையாட்டு நின்றுவிடவில்லை. இரண்டாவது முறையாக வங்கதேச அணி 14.1 ஓவர்கள் பேட்டிங் செய்த போது மீண்டும் இலக்கு மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் மாற்றியமைக்கப்பட்ட இலக்கு 170 ரன்கள் இல்லை என்றும் இலக்கு 171 ரன்கள் இலக்கு என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் வங்கதேச அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என வென்றது. மூன்றாவது போட்டி நாளை மறுநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடக்கிறது.

Views: - 229

0

0