அர்ஜுனா விருதுக்கு இரு இந்திய வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்க முடிவு..?

14 May 2020, 5:58 pm
india team - updatenews360
Quick Share

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இரு வீரர்களின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது.

ஆண்டுதோறும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசின் சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களின் சார்பில் சிறந்த வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து இரு வீரர்களை பரிந்துரை செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 26 வயதே ஆன உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிகிறது. அதேபோல, சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான தவானின் பெயரும் பரிந்துரைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த முறையே பும்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், சீனியர் என்ற அடிப்படையில் ஜடேஜா அர்ஜுனா விருதை தட்டிச்சென்றார். இந்த முறை பும்ராவுக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply