“இப்போ பேசி ஒரு ப்ரயோஜனமுமில்லை” – IPL கதி அகோகதியென்பதுப்போல் கைவிரித்த பிசிசிஐ…!

24 March 2020, 12:08 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அடுத்த இரண்டு மாதங்கள் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்தாகியுள்ளன. மேலும் அனைவரும் எதிர்பார்த்திருந்த IPL போட்டிகள் இனி நடக்குமா நடக்காதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வைகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்நிலையில் இன்று மாலை IPL அணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் வீடியோ கான்பெரென்ஸ் மூலம் இணைந்து பிசிசிஐயிடம் கலந்துரையாடி IPL போட்டிகளைப்பற்றிய இறுதியான முடிவினை எடுக்கப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. பெரும்பாலம் IPL போட்டிகள் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கும் செய்தி வருமென்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் பிசிசிஐயிடம் கேட்டபொழுது “தற்போது இந்தியாவில் நிலவிவரும் அபாயமான சூழ்நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாதகாரணத்தால் இப்போ பேசி ஒரு ப்ரயோஜனமுமில்லை. தேவைப்பட்டால் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் ரத்தாகும் நிலைக்கூட வரலாம்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறி இன்று ஒரு கூட்டமும் நடைபெறாதென்று அறிவித்தது.

Leave a Reply