அந்த 5வது டெஸ்ட்டுக்கு பதிலாக ரெண்டு டி20 …. இங்கிலாந்துடன் டீல் பேசும் பிசிசிஐ.!!!

Author: Babu
14 September 2021, 2:05 pm
india vs england - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில், 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 5 போட்டி மான்செஸ்டரில் நடப்பதாக இருந்தது. ஆனால், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட இந்திய அணியின் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனிடையே, இந்திய அணியின் ஜுனியர் பிசியோதெரபிஸ்ட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, 5 போட்டி ரத்து செய்யப்பட்டது.

இதனால், 5வது போட்டி எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதேவேளையில், அடுத்த ஆண்டு மீண்டும் இங்கிலாந்துக்கு இந்திய அணிச் சுற்றுப்பயணம் செய்யும் போது, 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களோடு சேர்த்து, இந்த ஒரு டெஸ்ட்டும் விளையாடப்படும் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட்டுக்கு பதிலாக, இரு டி20 போட்டிகளை விளையாட பிசிசிஐ முன்வந்துள்ளது. இனி இது தொடர்பான முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்தான் எடுக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 356

0

0

Leave a Reply