அன்று… இன்று… ‘இதுதான் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டா’ : நெகிழ்ந்த ரசிகர்கள்..!!! (வீடியோ)

5 February 2021, 6:29 pm
Dhoni - kohli - updatenews360
Quick Share

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நடுவே, கோலி – ரூட் இடையே நிகழ்ந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுததியுள்ளது.

சென்னையில் நடந்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களை சமாளித்து ஜோ ரூட்டும், தொடக்க வீரர் சிப்ளேவும் ரன்களை சேர்த்தனர். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோ ரூட் சதம் விளாசி, இங்கிலாந்து அணியின் வலுவான நிலைக்கு வித்திட்டார்.

இறுதியில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது. ஜோ ரூட் 128 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதனிடையே, ஆட்டம் முடிவதற்கு கொஞ்ச நிமிடங்களுக்கு முன்பாக, அஸ்வினின் பந்து வீச்சை ஸ்வீப் ஷாட்டின் மூலம் சிக்ஸ் அடித்தார். அப்போது, அவருக்கு காலில் லேசான தசைப்பிடிப்பால், மைதானத்திலேயே படுத்தார். இதனை பார்த்த கேப்டன் கோலி, அவரது காலை தூக்கி பிடித்து முதலுதவி செய்தார். இந்த வீடியோவை பகிர்ந்த பிசிசிஐ, ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் என குறிப்பிட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த பதிவிற்கு பதிலளித்து வந்த ரசிகர்கள், தென்னாப்ரிக்க வீரர் டூபிளசிஸுக்கு அப்போதைய கேப்டன் தோனியும் உதவிய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 0

0

0