Big Bash டி20 கிரிக்கெட் போட்டி… சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்!!
Author: Babu Lakshmanan28 ஜனவரி 2022, 7:54 மணி
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிட்னி சிக்ஸர் அணியை தோற்கடித்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவில் ஐபிஎல்லைப் போலவே ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பல்வேறு கட்ட சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்- சிட்னி சிக்ஸ்ர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக, எவன்ஸ் 76 ரன்களும், கேப்டன் அஸ்டன் டர்னர் 54 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸ்ர்ஸ் அணி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 79 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
0
0