இந்தியா – இங்கி., இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்ட 33 பேர் கைது!

Author: Udhayakumar Raman
27 March 2021, 2:13 pm
Quick Share

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டியை மையமாகக் கொண்டு கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டால் 33 புக்கிக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை மையமாகக் கொண்டு பெட்டிங்கில் ஈடுபட்ட 33 புக்கிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பெட்டிங் குறித்த ரகசியத் தகவலைத் தெரிந்து கொண்ட போலீசார் நடத்திய ரெய்டில் சிலர் பைனாகுலர் கொண்டு நேரடியாகப் போட்டியைப் பார்த்து அதன் மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டதாக போலீசார் உறுதி செய்தனர்.

மூன்று இடங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து போலீசார் நடத்திய தேடுதலில் 33 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் பைனாகுலர் மற்றும் அதிநவீன கேமராக்கள் மூலம் நேரடியாகப் போட்டியைக் கண்டு பெட்டிங்கில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் கிருஷ்ண பிரகாஷ் கூறுகையில், “மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரும், ஹரியானாவைச் சேர்ந்த 13 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 11 பேர் உட்பட மொத்தம் 33 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 45 லட்சம் இருக்கும். அதில் 74 மொபைல் போன்கள், மூன்று லேப்டாப்கள், ஒரு டேப்லெட், எட்டு அதிநவீன கேமராக்கள் மற்றும் பைனாக்குலர்கள் உட்பட வெளிநாட்டு பணங்களும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையின்போது சிலர் போலீசாரை தாக்கி தப்ப முயன்று உள்ளனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் கிரிக்கெட் சூதாட்டம் அரங்கேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 74

0

0