பரதநாட்டிய ஸ்டைலில் விசித்திரமாக பவுலிங் செய்த பவுலர்: வீடியோவைப் பகிர்ந்த யுவராஜ் சிங்!

17 January 2021, 7:39 pm
Bowler Barathanattiyam - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான முறையில் பந்துவீசுவதைப் பரதநாட்டிய முறை என்று வேடிக்கையாகவும் யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி ஊக்கப்படுத்தும் விதமான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் பந்து வீசும் வீரர் நடந்து வந்து கிரீசிற்கு அருகில் கிறு கிறுவென்று ஐந்து முறை சுற்றி பந்து வீசுகிறார். இதை யுவராஜ் இது தான் பரத நாட்டியம் ஸ்டைல் சுழற்பந்து வீச்சு என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பவுலர் யார் என்றும் போட்டி குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தற்போதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோகைல் தன்வீர் எனப் பலர் வித்தியாசமான பந்துவீச்சினால், பிரபலம் அடைந்தார்கள். ஆனால் இவர்களின் பவுலிங் ஆக்‌ஷனைவிட யுவராஜ் சிங் வெளியிட்ட வீடியோவில் அந்த பவுலரின் சைகை வித்தியாசமானதாகவே உள்ளது. இவரின் பவுலிங் முறையைப் புதிதாக ஒருவர் முயற்சி செய்தால் அவர் தலைசுற்றி கீழே விழுந்துவிடும் நிலையில் அவர் பந்துவீச்சு முறை உள்ளது.

https://www.instagram.com/reel/CKExkkZDC9h/

Views: - 6

0

0