“எனக்கும் அவருக்கும் எப்பவும் ஆவாதுங்க” – ரோஸ் டெய்லரை பற்றி கூறிய பிரபல நியூஸிலாந்து லெஜெண்ட்…!

22 March 2020, 11:23 am
Quick Share

2000க்கு பின் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பொற்காலமென்றால் பிரண்டன் மெக்கல்லமின் தலைமையில் அந்த அணி விளையாடிய காலம் தான். உலகளவில் புகழ் பெற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக 31 டெஸ்ட், 62 ஒருநாள் போட்டிகள் மற்றும் 28 T20I போட்டிகளில் விளையாடி 60 போட்டிகளில் வெற்றிக்கண்டுள்ளார்.


ஆனால் இந்த கேப்டன் பதவிக்கு பின்னால் நிறைய கசப்பான அனுபவத்தை பிரண்டன் சந்தித்துள்ளார். அவருக்கு முன் அணியை சிறப்பாக முறையில் நடத்திவந்தவர் கேப்டன் டேனியல் வெட்டோரி. இவர் கேப்டன் பதவியிலிருந்து விலகவே அடுத்து யாரென்ற போட்டி நிலவியது. அப்போது ப்ரெண்டனும் ரோஸ் டெய்லரும் தான் கேப்டன் பதவிக்கு தேர்ச்சியாக காணப்பட்டனர்.


முதலில் ரோஸ் டெய்லர் தான் கேப்டனாக பொறுப்பேற்று அணியை நடத்தி வந்தார். ஆனால் அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படாததால் அந்த கேப்டன் பதவி பிரண்டன் மெக்கல்லமிற்கு சென்றது. இந்த நாளிலிருந்து இன்றுவரை ரோஸ் டெய்லரும் ப்ரெண்டனும் சரியாக பேசிக்கொள்வதில்லை. “எனக்கும் அவருக்கும் எப்பவும் ஆவாதுங்க” என்று ப்ரெண்டன் ஒரு பேட்டியில் தற்போது கூறியுள்ளார்.

Leave a Reply