பிடபிள்யுஎப் ஃபைனல்ஸ்: வெளியேறிய சிந்து, ஸ்ரீகாந்த்!

28 January 2021, 8:21 pm
sindhu - updatenews360
Quick Share

உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வெளியேறினர்.

பிடபிள்யுஎப் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடக்கிறது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினர். இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, முதல் லீக் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொண்டார்.

இதன் முதல் செட்டை 21-19 போராடி கைப்பற்றிய சிந்து, அடுத்த இரண்டு செட்களையும் 12-21, 17-21 என கோட்டைவிட்டார். இதனையடுத்து நடந்த இரண்டாவது லீக் போட்டியில் சிந்து, தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனை சந்தித்தார். இந்தப் போட்டியில் துவக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்திய சிந்து 19-21, 13-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். இதையடுத்து அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை சிந்து இழந்தார்.

இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஆண்டிரஸ் ஆண்டன்சனை எதிர்கொண்டார் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இதன் முதல் செட்டை 21-15 என ஸ்ரீகாந்த் வென்றார். இதற்கு பின் எழுச்சி பெற்ற ஆண்டன்சன், அடுத்த இரண்டு செட்கப்ளை 21-16, 21-18 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இரண்டாவது ஆட்டத்தில் சீனதைபேவின் வாங் வீயை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் இதன் முதல் செட்டை 21-19 என வென்றார். அடுத்த இரண்டு செட்களையும் வாங் வீ 21-9, 21-19 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்ரீகாந்த்தும் அடுத்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

Views: - 0

0

0