இப்ப செஞ்சுரி… ஆண்டர்சன் சாதனையை மிஞ்ச முடியுமா? இஷாந்த் சர்மா சொன்ன பதில்!

23 February 2021, 11:12 pm
ishanth - Updatenews360
Quick Share

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல 38 வயது வரை விளையாட முடியுமா என்ற கேள்விக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பதில் அளித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தின் மோதிரா மைதானத்தில் துவங்குகிறது. இது இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100 ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். மூன்றாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா களமிறங்கும் போது, சர்வதேச டெஸ்டில் 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது இந்திய வேகப்பந்துவீச்சாளார் என்ற பெருமை பெறுவார்.

முன்னதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் ஒருவர் மட்டுமே இந்திய அணிக்காக 100 டெஸ்டில் பங்கேற்ற ஒரே இந்திய வேகப்பந்துவீச்சாளராவார். இதற்கிடையில் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா தான கடைசியாக இருப்பார் என்று பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் போல தானும் 38 வயது வரை இந்திய அணிக்காக விளையாட முடியுமா என்ற கேள்விக்கு இஷாந்த் சர்மாவே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில்,“38 வயது சார். நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு இது மிகவும் கடினமான விஷயம் தான். யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் நான் ஒரு நேரத்தில் ஒரு விதமான போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்றார்.

Views: - 172

0

0