இந்திய அணிக்கு இவர்கள்தான் ஓபனர்ஸ்…. பயிற்சி ஆட்டத்தின் போது கோலி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
19 October 2021, 11:32 am
Virat kohli - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் குறித்த அறிவிப்பை கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ளார்.

கடந்த 17ம் தேதி தகுதிச்சுற்றுப் போட்டிகளுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இந்திய அணி, 24ம் தேதி நடக்கும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடுகிறது.

இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டிக்கு முன்னோட்டமாக நேற்று இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின் போது, இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து விராட் கோலி தெரிவித்தார்.

அதாவது, தற்போதைய நிலவரப்படி, தொடக்க வீரர்கள் வரிசையில் கேஎல் ராகுலை தாண்டி யோசிப்பது கடினம். அதேபோல, ரோகித் சர்மா உலகத்தரமான வீரர். சிறப்பாக விளையாடி வருகிறார். நான் வழக்கம் போல 3ம் நிலை வீரராக களமிறங்குவேன். இப்போதைக்கு இதைமட்டும்தான் கூற முடியும், எனக் கூறினார்.

இதன்மூலம், ரோகித் சர்மாவுடன் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷானா..? அல்லது கேஎல் ராகுலா..? என்று நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Views: - 599

0

0