தவான் செய்த அதிரடி மாற்றம்… புதிய வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி : நாளை நியூசிலாந்துடன் பலப்பரீட்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 8:49 pm
ind vs nz- Updatenews360
Quick Share

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது.நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2வது போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய அணி முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக தான் இருந்தது. 306 ரன்களை குவித்தது. ஆனால் பந்துவீச்சில் தான் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. முதல் 3 விக்கெட்கள் விழுந்த போதும், இந்தியாவின் 5 பவுலர்களின் செயல்பாடுகளையும் எதிரணி வீரர்கள் நன்கு அறிந்துக்கொண்டனர்.

எனவே இந்திய அணியில் கூடுதலாக 6வது பவுலர் ஒருவர் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் மீண்டும் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்குவார்கள். முதல் விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ், பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களமிறங்குவார்கள். ஆனால் 6வது பேட்ஸ்மேன் தேவை என்பதால் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல் போட்டியிலும் ரிஷப் பண்ட் மிக மோசமாக சொதப்பினர். ஆனால் சஞ்சு சாம்சன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். எனவே சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தருவார்கள் என தெரிகிறது. ரிஷப் பண்ட் இடத்திற்கு தீபக் சஹார் அல்லது தீபக் ஹூடா கொண்டு வரப்படலாம். தீபக் சஹார் முழு உடற்தகுதியுடன் உள்ளாரா என்பதை சோதித்துவிட்டு, முடிவெடுக்கப்படும். மற்றபடி லோயர் ஆர்டரில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் / தீபக் ஹூடா, யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

Views: - 160

0

0