எங்களிடம் இருந்து இதைக்கற்றுக்கொண்டு இந்தியாவை பலப்படுத்திட்டாரு: கிரேக் சாப்பல்!

12 May 2021, 7:25 pm
Quick Share

ஆஸ்திரேலியாவிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியாவின் இளம் திறமைகளை சிறப்பாக உருவாக்க டிராவிட் எங்கள் திட்டத்தை பயன்படுத்திக் கொண்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் இந்திய பயிற்சியாளருமான கிரேக் சாப்பல். இந்தியாவில் பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாட காரணமாக ராகுல் டிராவிட்டை பாராட்டியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் விளையாடிய பல இளம் வீரர்களும் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் சாதிப்பதை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் இந்த யோசனையை ஆஸ்திரேலியாவை பார்த்து கற்றுக் கொண்டதாகவும் அதை சிறப்பாக மேம்படுத்திக் கொண்டதாகவும் முன்னால் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சாப்பல் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வீரர்கள் பலரும் சாதிக்க மிக முக்கியமானவர் ராகுல் டிராவிட். எங்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு அதை இந்தியாவில் செயல்படுத்தி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா அணி தங்களது இடத்தை இழந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

ஏனென்றால் சிறந்த இளம் திறமையான வீரர்களை கண்டுபிடிப்பதில் இங்கிலாந்து மற்றும் இந்தியா தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். வரலாற்றின்படி பார்த்தால் எங்களது உள்ளூர் தொடர் திட்டம் பல இளம் வீரர்களை கண்டுபிடிப்பதற்கும் அடையாளம் காணும் வழியாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது மாறி விட்டதாகவே நினைக்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக திறமையான வீரர்கள் அணியில் சேர்க்கப்படாமல் இருப்பதை காணமுடிகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திறமையான வீரர் ஒருவரை கூட இழக்க கூடாது” என்றார்.

Views: - 196

0

0