6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! முதல் அணியாக பிளே ஆஃப் நுழைந்த சென்னை

Author: kavin kumar
30 September 2021, 11:44 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கும்போல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சாகா 46 பந்தில் 44 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளசிஸ் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்தது.

அடுத்துவந்த மொயீன் அலி 17 ரன்னில் ரஷீத் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த ரெய்னா 2 ரன்னில் ஹோல்டர் பந்துவீச்சில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய டுபிளசிஸ் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் தோனி ஜோடி சேர்ந்தார். இறுதியில் 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 139 ரன்கள் எடுத்தது. அம்பதி ராயுடு 17 ரன்னிலும், தோனி 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேறியது.

Views: - 580

0

0