டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்ற சீனா : துப்பாக்கி சுடுதலில் தங்கத்தை தவற விட்ட இந்திய வீராங்கனைகள்!!

By: Udayachandran
24 July 2021, 8:39 am
Olympic China-Updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

2021- டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்று சீனா அசத்தியுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ரஷ்யா 2-வது இடத்தையும் சுவிட்சர்லாந்து 3-வது இடத்தையும் பிடித்தன.

பெண்கள் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் ‘நம்பர்-1’ வீராங்கனை, இந்தியாவின் இளவேனில், மூன்று முறை உலக கோப்பை தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா, பங்கேற்றனர். அவர்கள் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16வது இடம் பிடித்தார்.

இதே போல இந்தியாவின் அபுர்வி 621.9 புள்ளிகள் எடுத்து 36வது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல் 8 இடத்தில் உள்ளவர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாக உள்ளதால் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தங்கம் நழுவியுள்ளது.

Views: - 227

0

0