மைக்கேல் ஜாக்சன் மூவ்மெண்ட்டில் மிரட்டிய யுனிவர்சல் பாஸ் கெயில்!

7 April 2021, 8:14 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், மைக்கேல் ஜாக்சனின் மூவ்மெண்டில் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில். இவர் பாப் இசையை அதிகம் நேசிக்கும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கெயில் மைக்கேல் ஜாக்சனின் மூவ்மெண்டில் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். கடந்தாண்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கெயிலை தக்கவைத்தது அந்த அணி.

இந்தாண்டும் தனக்கு சிறந்த ஆண்டாக அமையும் என கெயில் காத்திருக்கிறார். தனிமைப்படுத்துதல் காலத்தை வெற்றிகரமாக முடித்துள்ள பஞ்சாப் அணிகள் தற்போது 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கெயில் ஹோட்டல் அறையில் தனது நடனமாடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கெயில் மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இதை பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பஞ்சாப் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது வரை அந்த வீடியோவை 100000 பேர் பார்வை செய்துள்ளனர். இந்தாண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளதால், இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாதித்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் இடம் பெற திட்டமிட்டுள்ளார். கெயிலைத் தவிர்த்து கே எல் ராகுல், மாயங்க் அகர்வால், நிகோலஸ் பூரான் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் கிங்ஸ் லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Views: - 0

0

0

Leave a Reply