கொரோனா பிரச்சனை ஏதுமில்ல… சட்டுபுட்டுனு போட்டிய மஜாவா நடத்துங்கப்பா…!!!

1 February 2021, 7:35 pm
kohli - test - updatenews360
Quick Share

சென்னையில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ் போட்டி பிப்ரவரி 5 – 9 வரை, இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 – 17 வரை சென்னையில் நடக்கிறது. தொடர்ந்து அஹமதாபத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி 24 – 28 மற்றும் மார் 4 – 8 வரையும் நடக்கவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இரு அணிகளில் யாருக்கும் தொற்று பாசிட்டிவ் இல்லை. எனவே, இன்று மாலை முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்காக வெளியே அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, இரு அணி வீரர்களும் நாளை முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Views: - 17

0

0