மைதானத்தில் இருமினால் முடிந்தது சோலி..! கொரோனாவால் புதிய கட்டுப்பாடு அமல்!!

3 August 2020, 6:49 pm
english premier league football - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரையில் உலகத்தின் அனைத்து மூளைகளிலும் நடக்கவிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும், சில போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

ஆனால், தொற்றுக்கு மத்தியிலும் ஐரோப்பா நாடுகளில் கால்பந்து தொடர் நடந்து வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் சில கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரு வீரரிடம் இருந்து மற்ற வீரர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க, வெற்றிக் கொண்டாட்டம், எச்சில் துப்புதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலீஷ் கால்பந்து தொடர் வீரர்களுக்கு மேலும் ஒரு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வீரர் மற்றொரு வீரரின் அல்லது நடுவரின் முகம் அருகே சென்று வேண்டுமென்றே இருமினால், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து, வெளியே அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், எல்லோ கார்டு கொடுத்து, சம்பந்தப்பட்ட வீரரை தண்டிக்க நடுவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அடிக்கடி இருமல் மற்றும் மைதானத்தில் துப்புதல் தண்டனைக்குள்ளாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 30

0

0