“ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார்” – சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு..!

29 August 2020, 11:56 am
Quick Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியுள்ளார் என, சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்.,19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21-ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணத்தில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 49

0

0