தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..!

9 October 2020, 8:26 pm
Dhoni with his daughter - updatenews360
Quick Share

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக இல்லை. நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக உள்ளது. டூபிளசிஸை தவிர அணியின் மற்ற வீரர்களும் ஃபார்மில் இல்லாததால், இதுவரையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மேலும், அணியின் வீரர்களின் தேர்வில் தோனி தவறு செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் வரை முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இந்த ஆட்டம் இப்படியே நீடித்தால், இந்த முறை பிளே ஆஃப்பிற்கு முன்னேறுவது சந்தேகம்தான்.

இந்த நிலையில், சென்னை அணியின் மோசமான ஆட்டத்தை கண்டிக்கும் விதமாக, கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி ஷாக்ஷியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அப்படி விடுக்கப்பட்டு வரும் விமர்சனப் பதிவில், கேப்டன் தோனியின் 5 வயது மகளான ஷிவாவை பலாத்காரம் செய்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கமெண்டிற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது எனக் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

மேலும், இது போன்ற கமெண்டுக்களை பதிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Views: - 152

0

0