நான் Daddy ஆகிட்டேன்…! குழந்தையின் போட்டோவை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்..!

30 July 2020, 4:50 pm
Hardik baby - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய காலகட்டத்திற்கு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. சர்வதேச அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே, தனது திறமையினால் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட என அனைத்து ஃபார்மெட்களிலும் நிரந்தர இடத்தையும் பிடித்தார்.

தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு பிறகு காயம் காரணமாக, போட்டியில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

இதனிடையே, செர்பியாவைச் சேர்ந்த நடிகையான நடாஷாவும், ஹர்திக் பாண்டியாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இருவருக்கும் நிச்சயமாகி விட்டதாக பாண்டியா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முன்னதாகவே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், நடாஷா கர்ப்பமாக இருக்கும் தகவலும், புகைப்படங்களும் வெளியாகி வந்தன. இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஊரடங்கு சமயத்தில் எளிய முறையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்.,19ம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணிக்காக ஆடி வரும் ஹர்திக் பாண்டியா, இதற்காக ஆயத்தமாகி வந்தார்.

இந்த நிலையில், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply