‘தலைவர்’ பாடலை பாடி நடராஜனை புகழ்ந்த வாஷிங்டன் சுந்தர் : டிரெண்டாகும் வைரல் வீடியோ!!

11 November 2020, 5:46 pm
TN players - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்ந்தவர்களில் முக்கியமான வீரர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஆவர். இவர் ஐதராபாத் அணிக்காக விளையாடி, அந்த அணி பிளே ஆஃப்பிற்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

இவரது சிறப்பான செயல்பாடுகளினால், எதிர்வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய அணி நாளை ஆஸ்திரேலிய புறப்பட்டு செல்கிறது. நடராஜனும் இந்திய அணியுடன் பயணித்து செல்கிறார். இதனால், இந்திய வீரர்களுடன் அவர் முகாமிட்டுள்ளார்.

இந்த நிலையில், மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர், நடராஜனை சினிமா பாட்டு பாடி புகழ்ந்துள்ளார்.

‘யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்’, என்னும் பாடலை பாடி அவருக்கு இனி நல்ல நேரம் ஆரம்பித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 27

0

0

1 thought on “‘தலைவர்’ பாடலை பாடி நடராஜனை புகழ்ந்த வாஷிங்டன் சுந்தர் : டிரெண்டாகும் வைரல் வீடியோ!!

Comments are closed.