காதலியின் பிறந்தநாளைக் கொண்டாட கொரோனா விதிகளை உடைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

28 January 2021, 9:32 pm
Quick Share

தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பயண விதிகளை மீறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூவண்டஸ் அணியின் ஸ்டிரைக்கரான நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சீரி ஏ தலைநகரான டரினிலிருந்து 150 கிலோமீட்டர் வட மேற்கே உள்ள கார்மேயூருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியான ஜார்ஜியா ரோட்ரிகஸ் பிறந்தநாளைக் கொண்டாட விதிகளை மீறிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ரொனால்டோவை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கு அவர் கருத்து அளிக்க மறுத்துவிட்டார். ஜுவாண்டஸ் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜியா ரோட்ரிகஸ் நேற்று தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கிடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ஆனால் இவர் பதிவிட்ட அந்த வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டார்.

ஆனால் அதற்குள் பல செய்தி நிறுவனங்கள் இவரின் வீடியோ பகிர்வு எடுத்துக்கொண்டது. இந்நிலையில் இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மலைப்பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்ததாகவும், பின்னர் அதிகாலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் பிறகு இவர்கள் சிரி ஏ அணிகளின் தலைநகர் டரினுக்கு திரும்பியதாகவும் அந்த செய்தியில் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய இத்தாலியின் கொரோனா வைரஸ் விதிகளின்படி இந்த ஜோடி டரினை விட்டு வெளியேற அனுமதி கிடையாது. இதனால் இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது. இவர்களுக்கு அதிகபட்சமாக 400 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பாகவும் ரொனால்டோ விதிகளை மீறியதாகச் சர்ச்சை எழுந்தது.

கடந்த அக்டோபர் மாதம் கொரோனா விதிகள் அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் ஜூவாண்டஸ் அணி வீரர்களுக்கு இருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரொனால்டோ போர்ச்சுகலுக்கு பயணம் செய்தார். அதன்பிறகு ரொனால்டோவும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டார் ரொனால்டோ.

அப்போது இத்தாலியின் விளையாட்டுத்துறை அமைச்சரான வின்சன்சோ இப்படி நட்சத்திர வீரர்களை விதிகளை மதிக்காமல் செயல்படுவது சிறந்தது அல்ல என்று ரொனால்டோவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் விதிகளை மீறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தனது காதலியின் பிறந்த நாளை கொண்டாட பயணம் செய்தது, மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகப் பேசப்படுகிறது.

Views: - 15

0

0