சென்னை அணியின் சுழலில் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் : இரண்டாவது வெற்றி பெற்று அசத்தல்!

20 April 2021, 6:11 am
Quick Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில்14வது ஐபிஎல் தொடர் தற்போது நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடந்த 12வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் (10), டுபிளசி (33) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த மொயின் அலி (26) ஓரளவு கைகொடுத்தார். ரெய்னா (18) நிலைக்கவில்லை. அடுத்து வந்த அம்பதி ராயுடு (27) ஓரளவு கைகொடுத்தார்.

அதிரடி காட்டிய கேப்டன் தோனி 18 ரன்னில் சகாரியா வேகத்தில் வெளியேறினார். ரவிந்திர் ஜடேஜா (8) ஏமாற்றினார் கடைசி நேரத்தில் சாம் கரன் (13) ஓரளவு கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு வோஹ்ரா (14) சுமாரான துவக்கம் அளித்தார். தொடர்ந்து வந்த கேப்டன் சாம்சன் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் வந்த் சிவம் துபே (17) நிலைக்கவில்லை. அடுத்து வந்த மில்லர் (2), பராக் (3), திவாதியா (20) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Views: - 71

0

0