2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இன்று கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவைன் பிராவோவுக்கு மாற்றாக யாரை கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
பிராவோவுக்கு சரியான மாற்று என்றால் அது இங்கிலாந்தின் சுட்டிக்குழந்தை சாம் கரண் தான், அவரை தான் மீண்டும் கொண்டு வரப்போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகின. இதற்கான முயற்சிகள் தான் முதலில் நடந்தன.
ஆனால் சாம் கரணை பஞ்சப் அணி 18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு நட்சத்திர ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை வாங்கியுள்ளது.
இதனை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் சூழலுக்கு ஏற்ப விளையாடுவதில் பென் ஸ்டோக்ஸ் கில்லாடி என்பதால், சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக பொருந்தி போவார் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் பென் ஸ்டோக்ஸ் என்ற ஒரு வீரரால் பெரிய மாற்றம் ஏற்படாது என்றாலும், அவரது பேட்டில் இருந்து வரும் வேகமான ரன்களும், பந்துவீச்சில் இருந்து வரும் சில விக்கெட்டுகளும் மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் சூழலுக்கு ஏற்ப பென் ஸ்டோக்ஸ் பயன்படுத்தினால், அந்த அணிக்கு வெற்றி நிச்சயம். அதில் சென்னை அணியின் தோனி கில்லாடி என்பதால், ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ரோலில் ஸ்டோக்ஸை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான யுத்தம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மும்பை அணிக்கு எதிரான பென் ஸ்டோக்ஸ் ஆடிய 6 போட்டிகளிலும், பென் ஸ்டோக்ஸ் ஆடிய அணியே வெற்றிபெற்றுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தான் அணியிடம் மும்பை அணி அடைந்த தோல்விகளுக்கு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோரே காரணமாக இருந்துள்ளனர்.
அதேபோல் டூ ஆர் டை போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்திறன் சிறப்பாக இருக்கும் என்பதும் கூடுதல் நம்பிக்கையை கொடுக்கிறது. இதனால் மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெறவே பென் ஸ்டோக்ஸை திட்டமிட்டு சென்னை அணி வாங்கியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.