பயிற்சிக்காக சென்னைக்கு விரையும் சி.எஸ்.கே. வீரர்கள் : முக்கிய வீரர் விலகல்..!

14 August 2020, 5:41 pm
Quick Share

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்.,19ம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் பயிற்சியில் ஈடுபட முடியும். இதையடுத்து, அனைத்து அணிகளும் பயிற்சி முகாமுக்காக ஆயத்தமாகி வருகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக, கேப்டன் தோனி ராஞ்சியில் நேற்று முன்தினம் தன்னை கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில், அவருக்கு நெகட்டிவ் என உறுதியாகியுள்ளது. இதையடுத்து, பிற வீரர்களும் பரிசோதனைக்குட்படுத்தி முகாமில் இணைய உள்ளனர்.

தோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பத்தி ராயுடு ஆகிய வீரர்கள் சென்னை வர உள்ளனர். இவர்கள் அனைவரும் பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மேற்பார்வையில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், தனிப்பட்ட பணி காரணமாக, ஜடேஜா விலகியுள்ளார். ஆனால், 21ம் தேதி அமீரகத்திற்கு புறப்படும் முன்பாக அவர் அணியுடன் இணைய உள்ளார்.

Views: - 6

0

0