சென்னையின் வெற்றி நடை தொடருமா… இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!

19 April 2021, 9:50 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 12வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில்14வது ஐபிஎல் தொடர் தற்போது நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 12வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்விக்கு பின் எழுச்சி பெற்று இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றியை தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சரியான துவக்கம் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. மிடில் ஆர்டரில் மொயின் அலி, சுரெஷ் ரெய்னா நம்பிக்கை அளிக்கின்றனர். ருதுராஜ், அம்பதி ராயுடு, கேப்டன் தோனி எழுச்சி பெற வேண்டும். டுவைன் பிராவோ, சாம் கரன், ரவிந்திர ஜடேஜா கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்த்தால் சென்னை அணி நல்ல ஸ்கோரை எட்டமுடியும். பஞ்சாப் அணிக்கு எதிராக மிரட்டி வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் அதே பார்ம்மை தொடர்ந்தால் நல்லது. தனிமைப்படுத்தல் காலத்தில் இருந்த தென் ஆப்ரிக்க வீரர் லுங்கி நிகிடி இன்று இடம் பெறுவார் என தெரிகிறது. சார்துல் தாகூர், டுவைன் பிராவோ கைகொடுத்த எதிரணிக்கு சிக்கல் தான்.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பட்லர், வோஹ்ரா, சாம்சன் ஆகியோர் கடந்த போட்டியின் சொதப்பலில் இருந்து எழுச்சி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளனர். மில்லர் மீண்டும் மிரட்டலாம். பந்துவீச்சில் உனத்கட், முஸ்தபிசுர் ரஹ்மான், சகாரியா நம்பிக்கை அளிக்கின்றனர். ராகுல் திவாதியா, பராக், ஸ்ரேயாஸ் கோபால் விக்கெட் வீழ்த்த முயற்சித்தால் நல்லது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 14 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 முறையும் வென்றுள்ளது.

Views: - 88

0

0