‘பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த’ : ரசிகர்களை குஷிபடுத்திய சென்னை வீரர்..!

22 August 2020, 1:16 pm
Imran-tahir-IPL - updatenews360
Quick Share

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்.,19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

5 நாள் நடந்த இந்த பயிற்சி முகாமில் கேப்டன் தோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா, தீபக் சாஹர் உள்பட பல வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் நேற்று மதியம் தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.

இதனை புகைப்படங்களாக எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவை ஷேர் செய்த சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ‘எடுடா வண்டிய.. போடுடா விசில’ என பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட் பதிவில், “என் இனிய தமிழ் மக்களே. உங்கள் நலம் நலமறிய ஆவல். பலமுறை வந்தோம் வென்றோம் சென்றோம். இம்முறை வருகிறோம் வெல்வோம் செல்வோம் உங்கள் நல்லாசிகளோடு. பாக்கத்தானே போறீங்க காளியோட ஆட்டத்த எடுடா வண்டிய… போடுடா விசில… என தெரிவித்து உள்ளார்.