‘பில்லா ரங்கா பாஷா தான்’ : தோனியின் மாஸ் போட்டோவை வெளியிட்ட சி.எஸ்.கே…!

11 September 2020, 5:58 pm
ms-dhoni-csk - updatenews360
Quick Share

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தக் கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. எனவே, அனைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளும், தங்களது அணி வீரர்களின் அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

19ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் விளையாடும் சென்னை அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகி விட்டனர்.

இதனால், முக்கிய வீரர்கள் இல்லாமல் கேப்டன் தோனி சமாளிப்பாரா..? என ரசிகர்கள் கமெண்டுக்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘யாரும் கவலைப்பட வேண்டாம், நமது அணியை வழிநடத்திச் செல்ல நம்ம தல தோனி இருக்காரு,’ என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் பதிலளித்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. நாற்காலி ஒன்றில் கூலிங் கிளாஸை போட்டு, அணியின் சீருடையான மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து, கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கிறார் தோனி.

அந்தப் புகைப்படத்திற்கு ரஜினியின் பாடலான ‘பில்லா ரங்கா பாஷா தான்’ என்னும் கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது. தோனியின் இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0