இந்திய பயணிகளுக்கு தடை விதித்த மாலத்தீவு… மைக்கேல் ஹசி நிலை என்ன: கவலையில் சிஎஸ்கே நிர்வாகம்!

13 May 2021, 8:01 pm
Quick Share

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மாலத்தீவு தடை விதித்துள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாக பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் மாலத்தீவு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்த வாரம் ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹசிக்கு 2வது முறையாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இவர் சென்னையிலேயே தற்போது தங்கியுள்ளார். இந்நிலையில் மாலத்தீவு இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கடந்த 11ம் தேதி முதல் தடை விதித்தது. இதனால் இவர் ஆஸ்திரேலியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தால் அவரால் மாலத்தீவில் உள்ள மற்ற வீரர்களுடன் இணைந்து செல்ல முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் எதையும் தெளிவாகக் கூற முடியாது. சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவருக்கு முதலில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அன்றைய தினத்தில் அவருக்கு செல்வதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும். இவரின் சோதனை முடிவு நாளை வெளியாகும். அதை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Views: - 427

0

0