“உங்களுக்கு வயசாகிடுச்சு…! சின்னப்புள்ளத்தனமா பண்ணாதீங்க” – கங்குலியை கிண்டல் செய்த யுவராஜ் சிங்…!

14 February 2020, 11:59 am
Quick Share

1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதியன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான சௌரவ் கங்குலி தனது முதல் டெஸ்ட் சதத்தை இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் பதிவு செய்தார். கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐயின் தலைவராக முன்னேறி பணியாற்றிவருகிறார்.


என்னதான் இவர் ஒரு முரட்டுத் தனமான விளையாட்டு வீரராக இருந்தாலும் இணையதளங்களில் வெகுளியாகவே காணப்படுகிறார். சின்ன குழந்தையைப்போல தனது சாதனைகளை நினைவுப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வந்தார். அதேப்போல லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதத்தை நினைவுபடுத்தினார்.


அதற்கு மறுமொழியாக இந்திய அணியின் மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் “உங்களுக்கு வயசாகிடுச்சு…! சின்னப்புள்ளத்தனமா பண்ணாதீங்க” என்று கமெண்ட் அடித்து கங்குலியை நேரடியாகவே கிண்டல் செய்தார். இந்த கமெண்ட் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.