பிரித்து மேய்ந்த் பிரித்வி ஷா… மரண காட்டு காட்டிய தவன்: சென்னை பவுலர்கள் மெகா சொதப்பல்!

10 April 2021, 11:14 pm
Quick Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பிரித்வி ஷா, ஷிகட் தவான் அரைசதம் அடித்து கைகொடுக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கி நடக்கிறது . மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் மொயின் அலி அறிமுக வீரராக களமிறங்கினார்.

ரெய்னா அபாரம்
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர் டுபிளசி டக் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான ருதுராஜ் (5) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின் இணைந்த மொயின் அலி, சுரேஷ் ரெய்னா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

மொயின் அலி 24 பந்தில் 4 பவுண்டரிகள் என 36 ரன்கள் அடித்த போது அஸ்வின் சுழலில் சிக்கினார். மறுபுறம் ரெய்னா (54) ஐபிஎல் அரங்கில் தனது 39வது அரைசதத்தை பதிவு செய்து அவுட்டானார். கடைசி நேரத்தில் ரவிந்திர ஜடேஜா (26*), சாம் கரண் (34) ஆகியோர் ஓரளவு கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது.

மரண அடி
எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அனல் பார்மில் உள்ள பிரித்வீ ஷா, ஷிகர் தவன் ஜோடி துவக்கம் அளித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்கள் ஒருவரைக் கூட விடாமல் இந்த ஜோடி விட்டு விளாசியது. இதன் விளைவாக டெல்லி கேபிடல்ஸ் அணி பவர் ப்ளே எனப்படும் முதல் 6 ஓவர்களின் முடிவில் 65 ரன்களை எட்டியது. இதன் மூலம் இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை, டெல்லி அணிகள் மோதியுள்ள 24 போட்டிகளில் முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய்து டெல்லி அணி. முன்னதாக கடந்த 2008 இல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி அதிகபட்சமாக 6 ஓவரில் 64 ரன்கள் அடித்திருந்தது.

கோட்டை விட்ட சாண்ட்னர்
இதற்கிடையில், பிரித்வி ஷா 38 ரன்கள் அடித்திருந்த போது மொயின் அலியின் பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சாண்ட்னர் கோட்டைவிட்டார்.இதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட பிரித்வி ஷா, அரைசதம் கடந்து மிரட்டினார். இவர் 38 பந்தில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 72 ரன்கள் அடித்திருந்த போது அவுட்டானார். இதன் பிறகு அதிரடியை தொடர்ந்த ஷிகர் தவானும் 85 ரன்கள் அடித்த போது சார்துல் தாகூர் வேகத்தில் வெளியேறினார்.

2015க்கு பின்
இந்த போட்டியில் தவான், பிரித்வி ஷா என இரு துவக்க வீரர்களும் அரைசதம் அடித்தனர். இதன் மூலம் கடந்த 2015க்கு பின் டெல்லி அணியின் இரு துவக்க வீரர்களும் முதல் முறையாக அரைசதம் கடந்தனர். கடந்த 2015ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மாயங்க் (52*), ஸ்ரேயாஸ் (54) ஆகியோர் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ் (14) ஏமாற்றினார். கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து டெல்லிகேபிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Views: - 67

0

0