தனி ஒருவனாக மல்லுக்கட்டிய மாயங்க்: டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!

2 May 2021, 9:11 pm
Quick Share

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நிகோலஸ் பூரானிக்கு பதிலாக இங்கிலாந்தின் தாவித் மலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். அதேபோல மாயங்க் அகர்வாலும் அணிக்கு திரும்பினார். டெல்லி அணியில் எந்த மாற்றமும் இல்லை.

மல்லுக்கட்டிய மாயங்க்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (12) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் (13) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். பின் வந்த தாவித் மலான் (26) ஓரளவு கைகொடுத்தார். தீபக் கூடா (1) நிலைக்கவில்லை.

ஒருமுனையில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேற மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் மாயங்க் நிதானமாக அணியின் ரன்களை உயர்த்தினார். 37 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்சர் விளாசிய மாயங்க் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது 9வது அரைசதத்தை பதிவு செய்தார்.

கைகொடுத்த ஷாருக்
இவருக்கு ஷாருக்கான் நல்ல் கம்பெனி கொடுத்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மாயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா வேகத்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என மிரட்டினார். ஷாருக்கான் 4 ரன்னில் வெளியேறினார். பின் கடைசி நேரத்தில் மாயங்க் அகர்வால் அதிரடி காட்ட, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்தது. மாயங்க் அகர்வால் (99) அவுட்டாகாமல் இருந்தார்.

Views: - 116

0

0

Leave a Reply