தரமான ரீஎண்ட்ரி கொடுத்த சின்ன ‘தல’… ஏமாற்றிய ‘தல’ தோனி… டெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

10 April 2021, 9:15 pm
Quick Share

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கி நடக்கிறது . மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் மொயின் அலி அறிமுக வீரராக களமிறங்கினார்.

மோசமான துவக்கம்
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர் டுபிளசி டக் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான ருதுராஜ் (5) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின் இணைந்த மொயின் அலி, சுரேஷ் ரெய்னா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

அசத்தல் ஜோடி
சீரான இடைவெளியில் இருவரும் பவுண்டரிகள் விளாசினர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இந்நிலையில் இருவரும் இணைந்து சுழற்பந்துவீச்சாளரை குறிவைத்து பவுண்டரிகள் அடிக்க துவங்கினர். குறிப்பாக அஸ்வின் பந்தில் முதல் மெயின் அலி 2 இமாலய சிக்சர்கள் பறக்கவிட்டார். தொடர்ந்து ரெய்னா தன் பங்கிற்கு இரு சிக்சர்கள் அடித்தார்.

ரெய்னா அரைசதம்
இந்நிலையில் மொயின் அலி 24 பந்தில் 4 பவுண்டரிகள் என 36 ரன்கள் அடித்த போது அஸ்வின் சுழலில் சிக்கினார். ஒருபுறம் விக்கெட் சரிந்த போதும் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா, ஐபிஎல் அரங்கில் தனது 39வது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து வந்த அம்பதி ராயுடு (23) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை.

தல சொதப்பல்
இந்நிலையில் ரெய்னா 54 ரன்கள் அடித்திருந்த போது ரன் அவுட்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் தோனி, ஆவேஷ் கான் வேகத்தில் போல்டானார். டன் அவுட்டான தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தனது 4வது டக் அவுட்டை பதிவு செய்தார். டாம் கரண் வீசிய போட்டியின் 19 வது ஓவரில் சாம் கரண் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தமாக் 23 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் ரவிந்திர ஜடேஜா, சாம் கரன் ஓரளவு கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது. ரவிந்திர ஜடேஜா (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

Views: - 101

0

0