டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்: சென்னை அணி பேட்டிங்!

10 April 2021, 7:13 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இந்திய ரசிகர்கள் கொண்டாடும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது . இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 14வது ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் நேற்று துவங்குகியது. இதில் மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ் மற்றும் டாம் கரண் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் மொயின் அலி அறிமுக வீரராக களமிறங்குகிறார். இரு அணிகள் இதுவரை மோதியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடஸ் அணி 5 போட்டிகளில் வென்றுள்ளது. தோனி கேப்டனாக களமிறங்கும் 188 வது போட்டி இதுவாகும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்கும் முதல் போட்டி இதுவாகும்.

டெல்லி கேபிடல்ஸ்: ஷிகர் தவான், பிரித்வி ஷா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பண்ட் (கே), மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், டாம் கரன், அமித் மிஸ்ரா, அவேஸ் கான்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வட், அம்பதி ராயுடு, ஃபாப் டுபிளசி, சுரேஷ் ரெய்னா, தோனி, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, சாம் கரன், டுவைன் பிராவோ, சார்துல் தாகூர், தீபக் சஹார்.

Views: - 33

0

0