தனிமனிதனாக போராடிய வில்லியம்சன்… வெற்றியை பறித்த ரபாடா..!! முதல் முறையாக இறுதிப்போட்டியில் டெல்லி அணி ..!!!

8 November 2020, 11:40 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய தவான், ஸ்டொய்னிஸ் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 86 ஆக இருந்த போது, ஸ்டொயினிஸ் (38) விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, அபாரமாக ஆடி அரைசதம் அடித்த தவான் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் (21), ஹெட்மயர் (42) அதிரடி காட்ட, டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு, கேப்டன் வார்னர், மணீஷ் பாண்டே இந்த முறையும் ஏமாற்றம் கொடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபுறம் அடுத்தடுத்து சரிந்தாலும், வில்லியம்சன் தனி ஒரு ஆளாக வெற்றிக்காக போராடினார். அவருடன், சமி, சமத், ஓரளவுக்கு பங்களிப்பு கொடுத்தனர். இருப்பினும், வில்லியம்சன் 67 ரன்களில் விக்கெட்டை இழந்த பிறகு, டெல்லி அணியின் கை மெல்லமெல்ல ஓங்கியது. ரபாடா ஒரே ஓவரில் 3 விக்கெட்டை கைப்பற்றி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில், ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 10ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் மும்பையை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது.

இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய டெல்லி வீரர் ரபாடா பர்ப்பிள் கேப்பை தனதாக்கிக் கொண்டார்.

Views: - 41

0

0