ரபாடா வேகத்தில் சரிந்தது பெங்களூரு : 4-வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி..!

Author: Udayaraman
5 October 2020, 11:31 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர் ப்ரித்வு ஷா (42) அதிரடி காட்டினார். இதைத்தொடர்ந்து, வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றம் அளித்தாலும், ஸ்டொய்னிஸ் (53), பாண்ட் (37) அதிரடி காட்டி ரன் குவித்தனர். இதனால், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் பேட்ஸ்மென்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். கேப்டன் கோலி மட்டும் வெற்றிக்காகப் போராடினார். ஆனால் அவரும் 43 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுத்ததை தொடர்ந்து, டெல்லி அணியின் வெற்றி உறுதியானது.

இறுதியில் பெங்களூரூ அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றறினார். இதன்மூலம், 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி, 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

Views: - 51

0

0