கைவிட்ட கோலி…கைகொடுத்த அதிர்ஷ்டம்… தோல்வியடைந்தும் டெல்லியோடு பிளே ஆஃப்பிற்கு முன்னேறிய பெங்களூரூ..!!

2 November 2020, 11:07 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையிலும், பெங்களூரூ அணி பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு படிக்கல் (50), டிவில்லியர்ஸ் (35), கோலி (29) ஆகியோர் பங்களிப்பு கொடுக்க, 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு பிருத்வி ஷா ஏமாற்றம் கொடுத்தாலும், ரகானே, தவான் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ரகானே (60), தவான் (54) விளாச, டெல்லி அணி 19வது ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து, பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது. அதேவேளையில், பெங்களூரூ அணியும் ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. ஒருவேளை 17.3 ஓவர்களிக்குள் பெங்களூரூ அணி தோல்வியை சந்தித்து இருந்தால், கொல்கத்தா அணி பிளே ஆஃப்பிற்கு முன்னேறியிருக்கும்.

நாள நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஐதராபாத் அணி, மும்பையை வீழ்த்தும்பட்சத்தில், 4வது அணியாக பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறும். தோல்வியை சந்தித்தால், கொல்கத்தா அந்த வாய்ப்பை பெறும்.

Views: - 30

0

0