சொல்லி அடித்த டெல்லி…. ராஜஸ்தான் அணியை திணற வைத்த வார்னர் – மார்ஷ்.. மிரட்டல் ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்ற டெல்லி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 May 2022, 11:30 pm
DC RR -Updatenews360
Quick Share

இன்று நடைபெற்ற 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். இந்த போட்டியில் பட்லர், 7 ரன்கள் மட்டுமே அடித்து ரசிகர்களை ஏமாற்றி தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து அஸ்வின் களமிறங்கினார்.

19 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய படிக்கல் அஸ்வினுடன் இணைந்து அதிரடியாக ஆட தொடங்கினார்.

இருவரும் கூட்டணி போட்டி சிறப்பாக ஆடிவந்த நிலையில், 50 ரன்கள் எடுத்து அஸ்வின் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்கள் எடுத்து களமிறங்க, பின்னர் 9 ரன்கள் எடுத்து ரியான் பராக் தனது விக்கெட்டை இழக்க, சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 48 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான 58-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய டெல்லி வீரர் ஸ்ரீகர் பாரத் டக் அவுட் ஆக, பின்னர் ஆடிய வார்னர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், மார்ஷ் மாஸான ஆட்டத்தை ஆடினார். ஒரு கட்டத்தில் வார்னர் தனது 55 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் மார்ஸ் 62 பந்துகளில் 89 ரன் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பின்னர் வந்த பண்ட் 4 பந்துகளில் 13 ரன் விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பண்ட் 4 ஆயிரம் ரன்களை கடந்தார்.

18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 161 ரன் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கும் டெல்லி வலுவான ரன்ரேட்டுடன் உள்ளது.

Views: - 1159

0

0