கொரோனா இல்லை என உறுதி செய்த பின் ஆர்சிபி அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்!

7 April 2021, 2:41 pm
Quick Share

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதன் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல், கடந்த மார்ச் 22ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். போதிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் தனிமையில் இருந்த இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது.

இதில் இரண்டு முறை எடுக்கப்பட்ட சோதனையிடும் இவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் அப்பொழுது அவர் பெங்களூரு அணியுடன் இணைந்து உள்ளார். இது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய உற்சாகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் விதிமுறைகளின்படி இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார். இந்த பத்து நாட்களில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது நாட்களில் என இரண்டு முறை வீரர்களுக்குச் சோதனை நடத்தப்படும்.

இந்த இரண்டு சோதனைகளும் அவர்களுக்கு நெகட்டிவ் என வந்து 24 மணி நேரத்திற்கு பின்பும் அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் மீண்டும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு செல்லப்படுவார்கள். அதேபோல அனைவருடன் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர் பயிற்சி ஈடுபடுவதற்கு முன்பாக, அவருக்கு இருதய செயல்பாடு சோதனை ஏற்பட்ட பின் அனுமதிக்கப்படுவார்கள்.

படிக்கல் கொரோனா வைரசிலிருந்து மீண்டு வந்த போதும் அந்த அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகப் படிக்கல் 473 ரன்கள் குவித்தார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் படிக்கல் சாதிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Views: - 2

0

0