பிரதமர் மோடி நினைத்தால் டி20 உலகக்கோப்பையில் தோனியால் விளையாட முடியுமா..?
19 August 2020, 6:11 pmஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்தார். இவரது அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட் வீரர்களுக்கே பெரும் ஷாக் கொடுத்துள்ளது. தோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களின் மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தோனியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தோனிக்கு அதிகளவிலான ரசிகர்கள் உள்ளனர். அவர் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருப்பினும், இந்த முடிவு அவரது தனிப்பட்டது.
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் வரை தோனி விளையாட வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைக்கலாம். ஒருவேலளை அவர் கோரிக்கை வைக்கும்பட்சத்தில், தோனி மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிகழ்ச்வு பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது. தோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம், என அவர் கூறினார்.