கேப்டன்ல எப்பவுமே பெஸ்ட் ‘தல’ தான் : சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் புகழாரம்

13 February 2020, 8:15 pm
CSK- updatenews360
Quick Share

இந்தியாவுக்கான கேப்டன்களில் எப்போதும் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் தோனிதான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் தோனியின் விக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒரு நூலிழை இடைவேளையில் ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்த தோனி, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதனால், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.

அவர் அணிக்கு எப்போது திரும்புவார், எப்போது அந்த நீல டீசர்ட்டை மாட்டுவார் என ரசிகர்கள் பெரிதும் ஆவலாக இருந்து வந்தனர். ஆனால், காலப்போக்கில், தோனியை அணி நிர்வாகமே ஓரங்கட்ட ஆரம்பித்தது. இதனால், தோனியின் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தல தோனி களமிறங்க உள்ளார். இதன்மூலம், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு பிறகே தோனி, பேட்டை பிடிக்க இருக்கிறார். இதனால், அவரை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தனியார் கிரிக்கெட் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், ‘எதையும் செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்திய அணியையே மாற்றிய சிறந்த கேப்டன் எங்களிடம் உள்ளார். இந்திய கேப்டன்களில் தோனி தலைசிறந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அதிகளவிலான ரசிகர்கள் உள்ளனர். எனவே, இந்த சீசனில் மைதானம் முழுவதும் நிரம்பியே காணப்படும்.

பியூஷ் சாவ்லா, ஹசில்வுட், சாம் குரான் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் உள்ளிட்ட திறமை வாய்ந்த நிறைய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இளைஞர்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கலவையாக எங்கள் அணி இருக்கிறது, எனக் கூறினார்.

Leave a Reply